யோகி ஆதியத்தியாத்

Home

shadow

 

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக நடந்த என்கவுண்டரில் ஏராளமான ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாநில அரசின் இந்த செயலுக்கு எதிர் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிலர் இந்த சமுதாயத்தை துப்பாக்கியால் அமைதிக்கு பங்கம் விளைவித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, துப்பாக்கி மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :