ரசாயன தாக்குதல் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைக்கு தக்க பதிலடி

Home

shadow

 

ரசாயன தாக்குதல் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி ஸ்கிரிப்பால் மற்றும் அவரது மகள்  யூலியா மீது கடந்த மார்ச் மாதம் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னனியில் ரஷ்யா இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் ரஷ்யா தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்திருந்தது. ரஷ்யாவில் தயாரிக்கப்படும் நோவிசோக் எனும் ரசாயனம் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரசாயன தாக்குதல் விவகாரம் தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகளை நேற்று விதித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிதுள்ளது. இது குறித்து பேசிய ரஷ்யாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், ரஷ்யா தன்னிடம் இருந்த ரசாயன ஆயுதங்களை கடந்த ஆண்டே அழித்துவிட்டதாகவும், ரஷ்யா மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரங்கள் தற்போது வரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்த அவர், அமெரிக்காவும் சுமூகமான உறவையே ரஷ்யா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :