ரஷ்ய தின கொண்டாட்டம்

Home

shadow

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்ய தின கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

 

சோவியத் யூனியன் சிதறுண்டு, ரஷ்யா தனி நாடாக உருவானதைத் தொடர்ந்து, கடந்த 1991ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி  அரசமைப்புச் சட்ட சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. ஆண்டுதோறும் இந்த தினம், ரஷ்ய தினமாக கொண்டாடப்படுகிறது. தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்ட இந்த தினத்தை ஒவ்வோர் ஆண்டும் ரஷ்யர்கள் விமரிசையாக கொண்டாடிவருகின்றனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி மற்றும்  நடன நிகழ்ச்சி காண்போரை கவரும் வகையில் அமைந்திருந்தது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இதில் கலந்து கொண்ட இசைக் கலைஞர்கர்கள், தங்கள் நிகழ்ச்சியை ரஷ்யாவில் நாளை தொடங்கவுள்ள 2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தனர். சிலர் பாரம்பரிய ரஷ்ய உடை அணிந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இது தொடர்பான செய்திகள் :