ரஷ்ய போர்க்கப்பல் நடவடிக்கைகளை கண்காணிக்க தனது போர்க்கப்பலை அனுப்பியதாக இங்கிலாந்தின் கப்பல் படையான ராயல் நேவி தெரிவித்துள்ளது

Home

shadow

அண்மைக்காலத்தில் ரஷ்ய போர்க்கப்பல்கள் இங்கிலாந்து கடல் பகுதிகளில் ரோந்து செல்வது அதிகரித்து உள்ளதாக இங்கிலாந்தின் கப்பல் படை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் வடகடல் பகுதிக்கு வந்த ரஷ்ய போர்க்கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ்யின் நடவடிக்கைகளை இங்கிலாந்தின் ராயல் நேவி கண்காணித்து வருகிறது. பல நாடுகளையும் கண்டங்களையும், இணைக்கும் கேபிள்கள் கடலுக்கு அடியில் செல்கின்றன. இந்த கேபிள்களைச் சீர்குலைக்க ரஷ்யா முயற்சிக்கலாம் என இங்கிலாந்து அச்சம் தெரிவித்திருந்தது. இங்கிலாந்தின் தகவல் தொடர்பு இணைப்புகளில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அது அந்நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கும் எனவும் இங்கிலாந்து கூறியிருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து கடல் பகுதிகளில் சுற்றித்திரியும் ரஷ்யாவின் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலைக் கண்காணிக்க டிசம்பர்23  தேதி முதல் பிரிட்டனின் எச்.எம்.எஸ். சென். அல்பன்ஸ் போர்க்கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :