ரஷ்யா - அமெரிக்க பொருட்களுக்கு தடை

Home

shadow


     அமெரிக்காவுடனான அணு ஆயுதக் கூட்டுத் தயாரிப்பு, ராக்கெட், ஏவுகணை மற்றும் விமானத் தயாரிப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வதற்கான சிறப்புத் தீர்மானத்தை ரஷ்யா கொண்டுவந்துள்ளது.

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை .நா.பாதுகாப்பு சபை நிராகரித்துள்ளது. இதனையடுத்து மூன்றாவது உலகப் போருக்கு தயாராகுமாறு தனது நாட்டு மக்களை ரஷ்யா அறிவுறுத்தி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அணு ஆயுதக் கூட்டுத் தயாரிப்பு, ராக்கெட், ஏவுகணை மற்றும் விமானத் தயாரிப்பு ஆகியவற்றுக்காக அமெரிக்க நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான சிறப்புத் தீர்மானத்தை ரஷ்யா கொண்டுவந்துள்ளது. மேலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் மது வகைகளுக்கு தடை விதித்தும் இந்தத் தீர்மானத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :