ரஷ்யாவில் கப்பலுடன் படகு மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

Home

shadow


 

ரஷ்யாவில் கப்பலுடன் படகு மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் உள்ள வோல்கோ ஆற்றில் நேற்றிரவு 16 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கப்பலுடன் படகு மோதியதில், படகில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 11 பேர் நீரில்  மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர். படகை ஓட்டி வந்த அதன் உரிமையாளர் குடி போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கப்பலில் இருந்து எழுப்பப்பட்ட அபாய எச்சரிக்கையை கவனிக்காமல் கப்பல் செல்லும் பாதையில் படகை அவர் செலுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :