ராணுவ காமண்டர்கள் மாநாடு

Home

shadow


ராணுவ கமாண்டர்களின் 6 நாள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இந்தியா சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் ராணுவ கமாண்டர்களின் மாநாடு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இதில் ராணுவத்தின் முக்கிய கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், ராணுவ கமாண்டர்களின் 6 நாள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்  தலைமை நடைபெறும் இந்த மாநாட்டில், ராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மேலும், எல்லைப் பகுதியில் சாலை, ரயில் பாதை போன்ற கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளது.

டோக்கலம் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்மீறல் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால், இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது

இது தொடர்பான செய்திகள் :