வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழை

Home

shadow

 வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் பெருத்த நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது இதேபோல், வங்கதேசம் - மியான்மர் எல்லையில் அமைந்துள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மழை மற்றும்  நிலச்சரிவில் சிக்கி மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மழை தீவிரமடைந்து வருவதால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மழையின் காரணமாக மியான்மரில் இருந்து வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் முகாம்களும் பெருத்த சேதம் அடைந்துள்ளன. அகதிகளை இடமாற்றம் செய்ய போதிய இடம் இல்லாததால் அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா சபையின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :