வங்கதேசம் கலீதா ஜியா

Home

shadow


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு மற்றொரு வழக்கில் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2001 முதல் 2006 வரை வங்கதேச பிரதமராக கலிதா ஜியா இருந்தபோது, அவரது பெயரில் செயல்பட்டு வந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பாக வழக்கில் கலிதா ஜியாவுக்கு டாக்கா சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. தற்போது கலீதா ஜாமின் பெற்றுள்ள நிலையில், கலீதா ஜியா ஆட்சியின்போது அவர் மீது தொடரப்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளுக்காக கோமில்லா மாவட்ட நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :