வங்கதேசம் 19 பேருக்கு மரண தண்டனை

Home

shadow


       வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் உள்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும்  19 பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டைநாடான வங்க தேசத்தில் இரு பெரும் பெண் அரசியல் தலைவர்களாக ஷேக் ஹசினாவும், கலிதா ஜியாவும் உள்ளனர். இவர்களில் ஷேக் ஹசினா தற்போது பிரதமராக உள்ளார்.  இந்நிலையில் கடந்த2004-ம் ஆண்டு  கலிதா ஜியா பிரதமராக பதவி வகித்தபோது எதிர்க்கட்சியான ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்றது.  அப்போது ஷேக் ஹசினாவை குறிவைத்து நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஷேக் ஹசினா காயங்களுடன் உயிர் தப்பினாலும்  அவரது செவித்திறன் பாதிக்கப்பட்டது. இந்த குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், அப்போதைய உள்துறை அமைச்சர் லுத்ஃபோஸ்மான் பாபர் உள்ளிட்ட 49 பேர் மீது டாக்கா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.   இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஷாஹெத் நூருதீன்முன்னாள் உள்துறை அமைச்சர் லுத்ஃபோஸ்மான் பாபர் உள்பட 19 பேருக்கு மரண தண்டனையும், தாரிக் ரஹ்மான் உள்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இது தொடர்பான செய்திகள் :