வடகொரியா - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

Home

shadow

அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட அமெரிக்கா தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பை ரத்து செய்துவிடுவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடன் உறவை மேம்படுத்த வடகொரியா முன் வந்தபோது, அணு ஆயுத சோதனைகளைக் கைவிடுவதாக அந்நாடு அறிவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்திருந்தன. இதனை தொடர்ந்து வடகொரியா மற்றும் தென் கொரியா அதிபர்களின் சந்திப்பு நடைபெற்றது. அடுத்த கட்டமாக ஜூன் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகள் தொடங்கின. இந்த நிலையில் அமெரிக்க அதிபருடன் நடைபெற உள்ள சந்திப்பை ரத்து செய்து விடுவதாக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசியுள்ள வடகொரியாவின் முதல் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் கிம் கேய் க்வான், வடகொரியா முழுமையாக அணு ஆயுதத்தை கைவிட வேண்டும் என அமெரிக்கா நெருக்கடி கொடுத்தால் அந்நாட்டு அதிபருடன் அடுத்த மாதம் நடைபெற உள்ள சந்திப்பு ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற நெருக்கடிகளை வடகொரியா விரும்பாது என்றும், ஈராக், லிபியா போன்ற நாடுகளின் அணு ஆயுத மாதிரியை வடகொரியா ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய ராணுவ போர் பயிற்சி ஒத்திகைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தென் கொரியாவுடனான உயர்நிலை பேச்சுவார்த்தையை தென் கொரியா ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :