வடகொரியா - தென்கொரியா பேச்சுவார்த்தை ரத்து

Home

shadow

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே நடைபெற இருந்த உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதத்தை முற்றிலும் கைவிடும் வகையிலான ஒப்பந்தம் இருநாட்டு தலைவர்களிடையே கையெழுத்தானது. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே இன்று நடைபெற இருந்த உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை திடிரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து ராணுவ போர் ஒத்திகை நடத்தியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே அணு குண்டு மற்றும் அணு ஆயுதங்களை தடை செய்யும் உலக நாடுகளின் முயற்சியில் வடகொரியாவும் இணையும் என ஐக்கிய நாடுகளின் சபைக்கான வடகொரியா தூதர் உறுதியளித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் போர் ஆயுதங்கள் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற வடகொரியா நாட்டுக்கான ஐ.நா தூதர் ஹான் டாய் சாங் இதனை தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :