வடகொரியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை சீனா மறுப்பு

Home

shadow

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தடையையும் மீறி வடகொரியாவுக்கு எண்ணெய் விற்பனை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

இது தொடர்பாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூவா சுன்யிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவுக்கு சீனா எண்ணெய் விற்பனை செய்வதாக கூறப்படும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்று குறிப்பிட்டுள்ளார். ஐ.நா.வின் தீர்மானங்களுக்கு எதிரான எந்தவொரு செயலிலும் சீன நாட்டு மக்களோ, நிறுவனமோ ஈடுபட சீன அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யா, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூன்று முறை கடல் மார்க்கமாக வட கொரியாவுக்கு கப்பல் மூலம் எண்ணெய் விற்பனை செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த இரண்டு புலனாய்வு அமைப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :