வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

Home

shadow

வடகொரியாவுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கும் தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச நாடுகளின் கண்டனம் மற்றும் ஐ.நா. தடைகள் என எதையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டுவந்தது.  இந்த தீர்மானம் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து ஒருமனதாக வாக்களித்தன. வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவும் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. வட கொரியாவின் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை ஒரு வருடத்திற்கு 5 லட்சம் பீப்பாய்களாகக் குறைப்பது, கச்சா எண்ணெயை ஒரு வருடத்திற்கு 4 மில்லியன் பீப்பாய்களாகக் குறைப்பது,  இயந்திரங்கள், மின் உபகரணங்கள் உள்ளிட்ட வட கொரியா பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது உள்ளிட்டவை இந்த தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும்.  ஏற்கனவே வட கொரியா மீது அமெரிக்கா, ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :