வெனிசுலா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா ஆதரவு அளிக்கும் விளாடிமிர் புதின் நம்பிக்கை

Home

shadow


 ரஷ்யா வந்துள்ள வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோவிடம் , உலக நாடுகளின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் நல்குவதற்கு வெனிசுலா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா ஆதரவு அளிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நம்பிக்கை அளித்துள்ளார்.


வெனிசுலா நாடு கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. அடிப்படை தேவைகளான உணவு ,மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டால் அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறும் அவல நிலை ஏற்பட்டது.வெனிசுலா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால், நிக்கோலஸ் மடுரோ உலகளவில்  தனிமை படுத்த பட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யா சென்றுள்ள மடுரோ ,அங்கு ரஷ்யா அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது பேசிய புதின் ,வெனிசுலாவின் மோசமான நிலைமை பற்றி ரஷ்யா நன்கு அறிந்து வைத்துள்ளது என்றும் ,ஒரு நாட்டின் தலைவராக உலக நாடுகளின் ஒத்துழைப்பை நல்கும் மடுரோவின் முயற்சிக்கு ரஷ்யா எப்போதும் ஆதரவாக இருக்கும் என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய மடுரோ ,வெனிசுலா பல்வேறு அச்சுறுத்தல்களையும் ஆக்ரமிப்புகளையும் சந்தித்துள்ளது என்றும் ,அதை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் தாங்கள் கற்று கொண்டு விட்டதாகவும் அவர் கூறினார். ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதில் வெனிசுலா ஆர்வமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்யா எப்பொதும் வெனிசுலாவின் பெரிய அரசியல் கூட்டாளியாக திகழ்கிறது. ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ரோஸ் நேபிட், தென் அமெரிக்க நாடுகளின் எண்ணெய் வயல்களில் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :