ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு

Home

shadow

            ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு

 

           கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றுவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

 

          கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று துவங்கியது.

 

          இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்த நாட்டின் துணை பிரதமர் ஜமீர் பேக் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

வரவேற்பை தொடர்ந்து இந்த மாநாட்டிற்கு அங்கு சென்றுள்ள சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்தார்.

 

        இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி கடந்த 30-ந் தேதி

பதவி ஏற்ற பின்னர், அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது இதுவே முதல் முறை.

 

         பேச்சின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றிக்கு ஜின்பிங் பாராட்டு தெரிவித்தார்.

         நாளை (15-ந் தேதி) ஜின்பிங்கின் 66-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு இந்திய மக்கள் அனைவர் சார்பிலும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

 

         இந்த சந்திப்பின்போது, இரு தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிற எல்லை பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லையில் தொடர்ந்து அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டது. சீன வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்தும் பேசப்பட்டது.

 

        ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றிய பிரச்சினையை பிரதமர் மோடி எழுப்பினார். பாகிஸ்தானுடன் இந்தியா சமாதான உறவையே விரும்புகிறது. பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என ஜின்பிங்கிடம் மோடி தெரிவித்தார்.

 

‌         ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று முடிகிறது. 

இது தொடர்பான செய்திகள் :