ஹங்கேரி நாட்டில் 4 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி விலக்கு

Home

shadow

                             ஹங்கேரி நாட்டில் 4 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் தனி நபர் வருமான வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக அந்நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பன் அறிவித்துள்ளார்.


அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஹங்கேரி பிரதமர் விக்டர், அந்நாட்டின் மக்கள் தொகையை அதிகரிப்பதன் மூலம் அகதிகளுக்கு பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என வலுவாக நம்பி வருகிறார். அந்த வகையில், தனது நாட்டு மக்களுக்கான ஆண்டு உரையில், அதிக குழுந்தைகள் பெற்று கொள்வோருக்கு என தனி சலுகைகளை விக்டர் அறிவித்துள்ளார். அதன்படி, 4 அல்லது அதற்கும் மேல் குழந்தைகள் பெற்றுக் கொண்ட மற்றும் வளர்த்து வரும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் தனிநபர் வருமான வரியில் இருந்து விலக்கு, 3 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் கொண்ட குடும்பத்தார் வாங்கும் 7 பேர் அமரக்கூடிய வாகனங்களுக்கு 6 லட்சம் ரூபாய் மானியம், 40 வயதிற்கு கீழ் முதல் முறையாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு 26 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் உள்ளீட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :