ஹங்கேரி - அதிபருக்கு எதிராக போராட்டம்

Home

shadow


            ஹங்கேரியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடான வழியில் வெற்றி பெற்றதாகக் கூறி, அந்நாட்டு பிரதமருக்கு எதிராக  ஒரு  லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹங்கேரியில் கடந்த வாரம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பிரதமர் விக்டர் ஆர்பன் கட்சி மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, அவர் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற 6 நாட்களுக்கு பிறகு தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை எதிர்த்து பொதுமக்கள் நேற்று பேரணி நடத்தினார்கள்இந்தப் பேரணியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர்  திரண்டு நாடாளுமன்றத்துக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் ஹங்கேரியின் தேசியக் கொடியையும், ஐரோப்பிய யூனியனின் கொடியையும் ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். தேர்தலில் முறைகேடு செய்து பிரதமர் விக்டர் ஆர்பன் வெற்றிபெற்று விட்டதாகவும், எனவே மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இது தொடர்பான செய்திகள் :