ஹெச் 1 பி விசாக்கு புதிய விதிமுறைகள்

Home

shadow

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிக திறன் உள்ளவர்களுக்கு மட்டுமே தற்காலிக குடியுரிமையான ஹெச் 1 பி விசாவை அமெரிக்க அரசு வழங்கி வருகிறது. இதற்கு ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின் வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அறிவித்தார். இதனையடுத்து ஹெச் 1 பி விசா விதிமுறைகளில் மாற்றங்கள் தொடங்கின. தற்போது விண்ணப்பங்களை கணினி குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி தேர்வான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. வரும் பிப்ரவரி முதல் இந்த புதிய விதிமுறை அமலாக உள்ளதால், அமெரிக்காவில் பணிக்குச் செல்ல விரும்பும் அதிக திறனுடையோருக்கு இனி அதிர்ஷ்டமும் துணையிருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :