ஹெஸ்பொல்லா போராளிகளால் உருவாக்கப்பட்ட சுரங்கபாதைகளை இஸ்ரேல் நாட்டு ராணுவம் அழிக்க அந்நாட்டு பிரதமர் ஆதரவு

Home

shadow

                             இஸ்ரேல் நாட்டில் மெட்டூலா மாகாணத்தில் லெபனானை சேர்ந்த ஹெஸ்பொல்லா போராளிகளால் உருவாக்கப்பட்ட சுரங்கபாதைகளை ,இஸ்ரேல் நாட்டு ராணுவம் அழிக்கும் நடவடிக்கைக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின்  நெதென்யாகு ஆதரவு தெரிவித்துள்ளார்.

வடக்கு இஸ்ரேலிய நகரமான  மெட்டூலா அருகே , லெபனான் நாட்டை சேர்ந்த ஹெஸ்பொல்லா போராளிகள்  கட்டியுள்ள எல்லைக்குட்பட்ட சுரங்கப்பாதைகளை  அழிக்ககும் நடவடிக்கையை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள்  மேற்கொண்டது. மேலும் இந்த அனைத்து சுரங்க பாதைகளை அழிக்கும் வரை ராணுவம் ஓயாது என ,இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர்  தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகு லெபனானில் இருந்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா போராளிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கபாதைகளை ராணுவம் அழிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். மேலும் ஹெஸ்பொல்லா போராளிகள்  லெபனான் மக்களை ஆபத்தில் தள்ளுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். லெபனான் நாட்டிலிருந்து ,இஸ்ரேலுக்கு எதிராக உருவாகும் அனைத்து தீவிரவாத செயல்களுக்கும் ,அந்நாடு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :