15,000 ரூபாய் தின்று பசி தீர்த்த நாய்

Home

shadow

       15,000 ரூபாய்  தின்று பசி தீர்த்த நாய்.

      இங்கிலாந்தில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய்  தனது எஜமானரின் 15,000 ரூபாய் பணத்தை தின்றுவிட்டது. இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியில் ஜூடித் ரைட் என்பவர்,லேப்ராடூல்  வகையை சேர்ந்த நாய் ஒன்றை, ஓசி என பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்நிலையில்,  ஜூடித் ரைட்டிற்கு  பணம் தர வேண்டிய அவரது நண்பர் ஒருவர், அவருக்கு தர வேண்டிய பணத்தை கவரில் போட்டு வீட்டில் உள்ள தபால் பெட்டியில் போட்டு சென்றுவிட்டார். அப்போது, பசியில் இருந்த ஓசி அந்த கவருடன் பணத்தையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜூடித் ரைட், ஓசியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, வயிற்றிலிருந்த பணத்தை வெளியே எடுத்தார். அதற்கு, அவர் செலவழித்த பணம் 11000. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த ஜூடித் ரைட், ’நல்லவேளை பிளாஸ்டிக்கை  உண்டுவிட்டதே என பயந்தேன். ஆனால், ஓசிக்கு எதுவும் ஆகவில்லை,’ என்று மகிழ்ந்தார்.  

இது தொடர்பான செய்திகள் :