2019 ஐ நா காலநிலை உச்சி மாநாட்டின் முக்கிய மூன்று குறிக்கோள்

Home

shadow

                 2015 ஆம் ஆண்டு பாரிஸ் பருவ நிலை மாநாட்டின் போது பருவ நிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்து தான் எடுத்துக்கொண்ட  இலக்குகளை திட்டமிட்டதற்கு முன்னதாகவே அடைய உள்ளதாக COP 24 மாநாட்டில் இந்தியா தெரிவித்துள்ளது.

பருவ நிலை மாற்றம் குறித்த ஐ நா வின் COP 24 மாநாடு போலந்து நாட்டின் கேடோவைஸ் நகரத்தில் கடந்த ஞாயிற்று கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பில் சுற்றுச் சூழல் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையிலான குழு போலந்து மாநாட்டில் கலந்துகொண்டுள்ளது.  மாநாட்டில் பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்தியாவை பொறுத்த வரை பருவ நிலை மாற்றம் என்பது  தொழில்நுட்ப பிரச்சனை மட்டும் அல்ல தார்மீக பிரச்சினை என தெரிவித்தார். 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா தான் எடுக்க உள்ள சில நடவடிக்கைகளை பட்டியலிட்டு இருந்தது. தற்போது, இந்தியா திட்டமிட்டதற்கு முன்னதாகவே இலக்கை அடைய இருப்பதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். காற்றின் மாசை குறைப்பது , புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அதிகரிப்பது, கார்பன் டை ஆக்சைட் அளவை குறைக்க காடுகளை வளர்ப்பது உள்ளிட்ட  நடவடிக்கைகளை இந்தியா விரைந்து எடுத்து வருவதாகவும் ஹர்ஷ் வர்தன்  தெரிவித்தார்.  COP 24 மாநாட்டில் பேசிய ஐநா பொது செயலாளர் António Guterres  2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐநாவின் காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டுக்கான தொலைநோக்கு பார்வையை பட்டியலிட்டார். பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய நமது குறிக்கோளை உயர்த்துதல், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள், முன் எப்போதும் இல்லாத வகையில் பொது மக்கள் , இளைஞ ர்களை அணி திரட்டுவது ஆகியவை 2019 ஐ நா காலநிலை உச்சி மாநாட்டின் முக்கிய மூன்று குறிக்கோள்களாக இருக்கும் என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :