8 வயது சிறுவனை மனித வெடிகுண்டாக பயன்படுத்திய பெற்றோர்

Home

shadow

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, இன்று சுரபயா நகரின் காவல்நிலையத்துக்கு அருகே இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உள்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை காவல் அதிகாரி,  2 மோட்டார் சைக்கிளில் 8 வயது சிறுவனுடன் வந்த பயங்கரவாதிகள், காவல்நிலையம் வெளியே உள்ள சோதனைச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாகவும், இச்சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவனின் தந்தை, ஜே.ஏ.டி எனப்படும் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :