அரசியலுக்காக போராட்டம் நடத்தி வேண்டும் என்றே சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் - அமைச்சர் சி.வி.சண்முகம்

Home

shadow

               அரசியலுக்காக போராட்டம் நடத்தி வேண்டும் என்றே சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் - அமைச்சர் சி.வி.சண்முகம்

அரசியலுக்காக போராட்டம் நடத்தி வேண்டும் என்றே சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என தமிழக அரசு இந்தப் பேரவையிலே முடிவு எடுக்க வேண்டுமென, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் பேசினார்.

இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலளித்தார். அப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் தொடங்க விண்ணப்பித்துள்ளதாகவும், அதனை ஆராய்ந்து தான் பரிசீலிக்கப்படும் என கூறினார்.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் திட்டமிட்டு போராட்டத்தை நடத்தி விவசாயிகளை சிலர் தூண்டுவதாகவும், மேலும் அரசியல் சுயலாபத்திற்காக போராட்டம் நடத்தி வேண்டும் என்றே சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :