சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் படி உயர் நீதிமன்றம் உத்தரவு

Home

shadow


       சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் படி ரண்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிலை கடத்தல் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்தி வரும் அதிரடி விசாரணையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபரான ரண்வீர் ஷா மற்றும் அவரது தோழியான கிரண் ராவ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விசாரணைக்காக இருவருக்கும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனை அடுத்து இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், சிலைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரண்வீர் ஷா மற்றும் கிரண்ராவை காவலில் எடுத்து விசாரிக்க தேவை உள்ளதாகவும், 15 நாள் அவகாசம் தேவைப்படுவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறினர். மேலும் ரண்வீர்ஷாவிடம் உள்ள ஆவணங்கள் போலி எனவும் தெரிவித்தனர். இதனை அடுத்து சிலைகளை வாங்கியது தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ரண்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மேலும் ஜாமீன் மீதான மனுவில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

இது தொடர்பான செய்திகள் :