முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில்
புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில்
தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
அணை பலவீனமாக இருப்பதாக கூறி அங்கு புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கேரள அரசு
இறங்கியது.
இதற்கு தமிழக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என
தமிழகம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கேரள அரசு இன்று பதில் மனு தாக்கல்
செய்துள்ளது. பதில் மனுவில், முல்லைப்பெரியாறில்
புதிய அணை கட்டும் பணியில் ஈடுபடவில்லை என்றும், மாற்று அணை
அமைப்பதற்கான தகவல்களை திரட்டும் பணியில் மட்டுமே தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கேரள
அரசு தெரிவித்திருந்தது. கேரளாவுக்கு எதிராக தமிழக அரசு
தொடர்ந்த நீதிமன்ற அவதூறு வழக்கில் கேரள அரசின் பதிலை ஏற்று திட்ட அறிக்கையைத்
தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.