ஆரோக்கியமான உணவை உண்ண வலியுறுத்தி விழிப்புணர்வு

Home

shadow

 

           ஆரோக்கியமான உணவை உண்ண வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும், ஆரோக்கிய பாரத பயணம், தருமபுரியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு சென்றது.

சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை உறுதி செய்ய சரியான உணவை உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் பரப்பும் வகையில். ஆரோக்கிய பாரத பயணம் கடந்த 16ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இப்பயணம் மதுரை, ஈரோடு, சேலம் வழியாக கடந்த 6ஆம் தேதி தருமபுரி வந்தடைந்தது. இதையடுத்து இரண்டு நாட்களாக, கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தருமபுரி அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆரோக்கிய பாரத பயணம் சைக்கிள் பேரணியை ஆட்சியர் மலர்விழி தொடங்கி வைத்தார். இந்த பேரணி, காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டுச் சென்றது. 

இது தொடர்பான செய்திகள் :