சர்வதேச அளவில் மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி நடத்த அமைச்சர் செங்கோட்டையன் திட்டம்

Home

shadow


      தமிழக பள்ளிக் கல்வித்துறை  சார்பில் சர்வதேச அளவில் மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் பள்ளியில், மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. இதனை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.  சிறப்புத் திட்டங்கள் மூலமாக விளையாட்டுக்கு தேவையான உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச அளவில் மாணவர்களுக்கான சதுரங்க போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில்  தனியாருடன் இணைந்து விளையாட்டு இட வசதிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :