சென்னை – மத்திய அரசால் தமிழகத்துக்கு நல்ல திட்டங்கள்

Home

shadow

1. 

       தமிழகத்துக்கு பல நல்லதிட்டங்களை மத்திய அரசு அளித்து வருவதாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை சந்திக்க இப்போதே பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் தங்களது இல்லங்களில் கட்சியின் கொடியை ஏற்றி பணியாற்றி வருவதாக  தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். மேலும், பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா நாளை மறு தினம் ஈரோடு வருவதாகவும், பதினைந்தாம் தேதி மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வருவதாகவும் தெரிவித்தார்.  பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளதை குறிப்பிட்ட அவர், மத்திய அரசு தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களை அளித்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :