ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து கடையடைப்பு போராட்ட

Home

shadow

 

        கும்பகோணம் அருகே திருபுவனம் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது

கும்பகோணம் அருகே திருபுவனம் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இந்து அமைப்புகள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன, இதன் ஒரு பகுதியாக திருபுவனம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல் கும்பகோணம் நகரிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ராமலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் இன்று கும்பகோணத்தில் அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் பேரணியாக செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கும்பகோணம் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அமைதிப் பேரணி தொடங்க உள்ள காந்தி பூங்கா பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உயிரிழந்த ராமலிங்கத்துக்கு அஞ்சலி செலுத்த, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் சென்றனர். முத்துப்பேட்டையில் இருந்து கும்பகோணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர்களை மன்னார்குடி மேலப்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மன்னார்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :