இந்தாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இந்திய ரயில்வே துறை தகவல்

Home

shadow

இந்திய ரயில்வேயில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஜூலையில் உத்தரப்பிரதேசத்தில் கலிங்க உத்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். 156 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, பல இடங்களில் விபத்துகள் நடந்தன. இதற்கு ரயில்வே ஊழியர்களின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2016-2017ஆம் ஆண்டில் முதல் எட்டு மாதத்தில் 78 ரயில் விபத்துக்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு ஜனவரியில் தொடங்கி முதல் எட்டு மாதங்களில் 37 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளதாக கூறியுள்ளது. இந்தாண்டு மட்டும் ரயில் விபத்துகளில் மொத்தம் 48 பேர் இறந்துள்ளதாகவும், 188 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, கடந்தாண்டில் 238 பேர்  உயிரிழந்ததாகவும், 607 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :