ஈரோட்டிலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

Home

shadow


          ஈரோட்டிலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ள நிலையில், அந்த இடத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஈரோடு பவளத்தான் பாளையம் ஏஈடி பள்ளி மைதானத்தில் வரும் 19ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கேசி கருப்பண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டு வரும் வாடிவாசல் கண்காணிப்பு கோபுரங்கள், தடுப்பு வேலிகள் போன்றவற்றை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது, தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் கதிரவன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இது தொடர்பான செய்திகள் :