உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு, சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

Home

shadow


       உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு, சேலத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலக கண் பார்வை தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் சேலத்தில் உலக கண்பார்வை தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பார்வையின்மை மற்றும் காட்சி குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சேலம் மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, உலக கண் பார்வை தினம் குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இது தொடர்பான செய்திகள் :