ஏலச்சீட்டு நடத்தி 15 லட்சம் மோசடி

Home

shadow

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர், அண்மையில் குடும்பத்துடன் தலைமறைவானார். இதனால் அவரிடம் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் செந்தில்குமார் குடியிருந்த வீட்டை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் செந்தில்குமாரின் தந்தை, பாண்டுரங்கன் லாரியை கொண்டு வந்து வீட்டை காலி செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்த பாதிக்கப்பட்டவர்கள், அவரை பிடித்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் சேலையூர் போலீசார் ஏலச்சீட்டு விவகாரங்களை இங்கு விசாரணை செய்ய முடியாது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :