கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள்,வழங்க நடவடிக்கை

Home

shadow


        கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள், நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் 20ம் பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். 650 பேருக்கு நேரிடையாகவும், 256 பேருக்கு அஞ்சல் மூலமும் பட்டங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 12ஆயிரம் கறவை பசுக்கள், 5ஆயிரம் ஆடுகள், 50ஆயிரம் நாட்டுக்கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக கூறிய அவர் அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க சிறப்பு நிதியாக 150 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :