கல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

Home

shadow

                  சாத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் தொந்தரவு  செய்த கல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தூர் அருகே வெற்றிலையுராணி பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவன் கோபிநாத். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது தொடர்பாக சாத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இதனையடுத்து, இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, சிறுமியிடம் வம்பு செய்த மாணவணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இது தொடர்பான செய்திகள் :