காவலர் பொதுப் பள்ளி இன்று திறப்பு

Home

shadow


காஞ்சிபுரம் மாவட்டம்ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியக வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள காவலர் பொதுப் பள்ளியைகாணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி இன்று  திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலர் பொதுப் பள்ளி  நிறுவுவதற்காக 51 கோடியே 14 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இப்பள்ளிக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியக வளாகத்தில் தற்காலிகமாக இடம் தேர்வு செய்யப்பட்டு, 2018-2019ஆம் கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், ஆங்கில வழி கல்வியில் 5-ஆம் வகுப்பு வரை தொடங்கிட அரசாணை வெளியிடப்பட்டது. இக்காவலர் பொதுப் பள்ளியில் காவலர்களின் குழந்தைகள் மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குழந்தைகளும் கல்வி பயில்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்காவலர் பொதுப்பள்ளியை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அத்துடன், இப்பள்ளியில் பணியாற்றுவதற்காக ஒரு தலைமை ஆசிரியை மற்றும் 5 ஆசிரியைகளுக்கு மாற்றுப் பணி ஆணைகளையும், 50 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை ஆணைகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்,பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான செய்திகள் :