சசிகுமார் கொலை வழக்கில் கைது ஆன குற்றவாளியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Home

shadow

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி முபாரக், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி சி.பி.சி..டி போலீசார் மனு தாக்கல் செய்து ள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் பல இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் முடிந்தன. இந்த வழக்கை சி.பி.சி..டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். சசிகுமார் கொலை தொடர்பாக சதாம், சுபேர், அபுதாகீர், ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முபாரக்கை, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நேற்று முன்தினம் சி.பி.சி..டி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் நேற்று முபாரக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது முபாரக்கை வரும் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே முபாரக்கை 14 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி சி.பி.சி..டி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :