சிபிஎஸ்இயின் முடிவை பொருத்தே தமிழக அரசின் நடவடிக்கை இருக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Home

shadow


நீட்தேர்வு  கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ என்ன முடிவு எடுக்கிறதோ அதனைப் பொருத்து தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் தொகை தினத்தையொடி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறையில் இந்தியாவில் முன்னிலை  மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும், கடந்த 2000-ஆம் ஆண்டு 24 சதவீதமாக இருந்த மக்கள்தொகை பெருக்கம்படிப்படியாக குறைந்து, தற்போது 7 புள்ளி 2 சதவீதமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும்நீட் எதிர்ப்பு கொள்கையில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு விவகாரத்தில்  மாணவர்களுக்கு சாதகமாக தான் அரசு  செயல்படும் என்றும் கூறினார். தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் சிபிஎஸ்இ என்ன முடிவு எடுக்கிறதோ அதனை பொருத்தே தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் எனவும் தெரிவித்தார்.  

இது தொடர்பான செய்திகள் :