டிக்டாக் செயலி மீதான தடை உயர் நீதிமன்றம் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Home

shadow

டிக்டாக் செயலி மீதான தடையை நீக்க கோரும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிக்டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை விதித்த தடை உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தடையால், கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், செயலி மீதான தடையை நீக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றமே வரும் 24-ஆம் தேதி முடிவெடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு தவறும் பட்சத்தில், செயலி மீதான தடை உத்தரவு காலாவதியாகிவிடும் என தெரிவித்துள்ளது.


இது தொடர்பான செய்திகள் :