தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Home

shadow

            தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணத்தில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை  முன்னிட்டு வாக்களர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக   தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நகராட்சி சார்பில்  வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில்காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த பேரணியில்  நகராட்சி ஆணையர் ஜெகதீசன் சுகாதார துறை ஆய்வாளர் டேவிட் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வாக்களிப்பதன்  அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொகுதிக்கு தொகுதி கட்சிக்கு கட்சி உருவாகும்  அதிருப்தி அலைகள் ஒவ்வொரு கட்சியின்  தலைமையையும்  திணறடித்து வருகிறது இது குறித்து கூடுதல் தகவல்களை எமது  மூத்த செய்தியாளர் துரை தரும் கூடுதல் தகவலைக் காணலாம்

இது தொடர்பான செய்திகள் :