தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் குளறுபடி

Home

shadow

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் பெயர் மற்றும் முகவரிகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு ஒரே கட்டமாக மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது,. இதில் தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட 14 மையங்களில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தாங்கள் தேர்வு எழுதும் மையத்தின் குறியீடுடன் கூடிய ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியிடப்படுள்ளது. ஆனால் ஹால்டிக்கெட்டில் தேர்வு எழுதும் பள்ளிகளின் பெயர்கள் முகவரி உள்ளிட்ட வற்றில் பெறும், குளறுபடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதில் சிவகங்கை ராமநாதபுரம் தேனி, திருநெல்வேலி , மதுரை , உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளின் ஹால்டிக்கெட்டுகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து  அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாணவர்களின் தகவல்களில் ஏதேனும் குளறுபடி இருந்தால், அந்த பள்ளித் தலைமை ஆசிரியரின் உதவியுடன் திருத்தம் மேற்கொண்டு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :