தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு சம்பவம் ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 4 ஆண்டுகள் சிறை

Home

shadow

                                                                                      மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்பது தொடர்பாக கருத்து கணிப்பு வெளியிட்டதற்காக மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அங்கு பணியாற்றிய 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில், அட்டாக்பாண்டி உள்பட 9 பேருக்கு தலா  3  ஆயுள் தண்டனை விதித்து கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்பளித்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் மார்ச் 25 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் . அப்போது அவருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :