திருவண்ணாமலை - மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் காவல் நிலையத்தில் இருந்து மாயம்

Home

shadow

                                                           திருவண்ணாமலை அருகே மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் காவல் நிலையத்தில் இருந்து மாயமான சம்பம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த பலவருடங்களாக தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரி மற்றும் டிராக்டர்களில் தொடர் மணல் திருட்டு சம்பவம் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர். இந்நிலையில்,  ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் பைபாஸ்சாலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு டிராக்டரில் ஆற்று மணல் கடத்திய ஒரு டிராக்டரை,  ஆரணி கிராமிய காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் டிராக்டர் ராட்டின மங்கலம் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவருடையது என்று தெரியவந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்து டிராக்டர் ஆரணி கிராமகாவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை திருடி சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் இருந்து டிராக்டர் திருடுபோன சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான டிராக்டரை தேடிவருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :