திருவாரூர் – மாணவிகளுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Home

shadow


          ஜே.சி.ஐ மன்னை சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு புற்றுநோய்    குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடியில் நடைபெற்றது.                        

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஜே.சி.ஐ மன்னை சார்பில் புற்றுநோய் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தர்மராஜன், அசோக்குமார் இருவரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு விதமான புற்று நோய்கள் குறித்தும்,அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் புற்றுநோய் குறித்த மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கும் மருத்துவர்கள் பதிலளித்தனர். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

இது தொடர்பான செய்திகள் :