பட்டாசு தயாரிப்புக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை தளர்த்தக் கோரி பட்டாசு தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

Home

shadow

                                                            பட்டாசு தயாரிப்புக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை தளர்த்தக் கோரி, சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த நவம்பர் 12ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. கடந்த 82 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், 4 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மூடிய பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும், பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும், காற்று மாசு சுற்றுப்புறச் சூழல் இவற்றில் இருந்து விலக்கு அளிக்கவும், வேலை இழந்த காலங்களுக்கு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில் இன்று முதல் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனர். இதன்படி, முதல் நாளான இன்று சிவகாசி குறுக்குப் பாதை திடலில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில் பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தில் பட்டாசுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், தனித் தீர்மானம் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்

இது தொடர்பான செய்திகள் :