பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க விளையாட்டு போட்டிகள்

Home

shadow


      கோவையில் பள்ளி மாணவ, மணவிகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

கோவை துடியலூரை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டுதோறும் குழந்தைகள் முதல் அனைவரும் விளையாட்டு துறையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளை சர்வதேச தடகள பயிற்சியாளருமான பல்வேறு தங்கப் பதக்கங்களை வென்ற அண்ணாவி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து முதற்கட்டமாக விளையாட்டு போட்டிக்கான அணிவகுப்பு, ஒலிம்பிக் ஏந்திய நிகழ்ச்சி நடைபெற்ற பின் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகள போட்டிகள், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான பல்வேறு வகையான போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்படுவதுடன், தேசிய அளவில் பங்கேற்வதற்கான வாய்ப்பையும் அளிப்பதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைகின்றது

இது தொடர்பான செய்திகள் :