வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - வெறிச்சோடி காணப்பட்ட வாக்குச்சாவடி

Home

shadow

                  கும்மிடிப்பூண்டியில் இரும்பு உருக்காலை திறக்கப்பட்டதை கண்டித்து நாகராஜ கண்டிகை கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை  புறக்கணித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நாகராஜ கண்டிகை கிராம கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள இரும்பு உருக்காலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மூச்சுத் திணறல் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டும் இப்பகுதி மக்கள், உருக்காலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். இங்கு 286 ஆண் வாக்காளர்கள் மற்றும் 277 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 552 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க செல்லாததால், அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இது தொடர்பான செய்திகள் :