வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வெள்ளி ரிஷப வாகனத்தில் இன்று எழுந்தருளினார்

Home

shadow

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் வழிபட்ட ஸ்தலமாக கருதப்படுகிறது. தனூர் மாதத்தில் ஆண்டுதோறும் சிவபெருமான், வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நான்கு வேதங்களும் புடைசூழ வேதாரண்யேஸ்வரர் சுவாமி அம்பாளுடன் இன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதையடுத்து, நாகை ரஸ்தா காசிவிஸ்வநாதர் கோவில் எதிரே அமைந்துள்ள வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வேதாமிர்த ஏரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இது தொடர்பான செய்திகள் :