70 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்க திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்

Home

shadow           ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் 70 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது, புதிய பாடத்திட்டத்தின் படி மாணவர்கள் தயாராக 240 நாள்கள் தேவைப்படுவதாகவும், அதற்காக அவர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை பதிவிறக்கம் செய்து படிக்க TAB உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :